கட்டிட மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை பிரிவின் ஆய்வுகூடமானது நாட்டில் காணப்படும் கட்டிட மூலப்பொருட் பரிசோதனை தொடர்பான மிகப்பழமைவாய்ந்த ஆய்வுகூடமாகும். அதன் சேவைகள் தற்போது விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் காணப்படும் முக்கிய பெயர்பெற்ற ஆய்வுகூடமாகவும் உருவாகியுள்ளது. எம்மால் பௌதீக மற்றும் இயந்திரவியல் மாதிரி பரிசோதனைகள், கட்டிட ஆய்வுகள், விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் மற்றும் கட்டுமாண மூலப்பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் வழங்கப்படுகிறது.

இந்த ஆய்வுகூடத்தின் பரிசோதனை முடிவுகள் நம்பிக்கை மிக்கவையாகவும் வினைத்திறன் உள்ளவையாகவும் சேவையுறுனர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எமது ஆய்வுகூடமானது இலங்கை தர நிர்ணய சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எமது ஆய்வுகூடத்தில் தகுதிவாய்ந்த மற்றும் அனுபவமிக்க பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பணியாற்றுகின்றனர். எமது ஆய்வுகூட உத்தியோகத்தர்கள் சேவையுறுனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பயிற்றப்பட்டும் பரிசோதனை செயற்பாடுகளில் வினைத்திறனுள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர்.

BMRTDஇன் ஆய்வுகூட தரநிர்ணய நிலை

சர்வதேச தர நிர்ணயங்களுக்கு (ISO) அமைய  மூலப்பொருள் பரிசோதனை ஆய்வுகூடமானது தர நிர்ணய சான்றிதழ் பெற்றுள்ளது. நிறுவனத்தின் கொங்க்ரீட் பரிசோதனை ISOஇன் 17025 நியமங்களுக்கமைவாக  உள்ளதாக சான்றிதழ் பெற்றுள்ளதுடன் இலங்கை தர நிர்ணய சபையின் 1144 நியமத்திற்கமைவான சான்றிதழையும் பெற்றுள்ளது. மேலும் வலுவூட்டல் கம்பிகளின் இழுவிசை தொடர்பான பரிசோதனை தொடர்பில் (BS 4449 & SLS 375) ISO 6892 & SLS 978  தர நிர்ணய சான்றிதழை பெற்றுள்ளது.

ஊழியர் பயிற்சி மற்றும் தகுதி மதிப்பீடுகள் ஆகியன தரமதிப்பீட்டு கையேட்டின் படி மேற்கொள்ளப்படுவதுடன் அவை இலங்கை தர நிர்ணய சபையால் அடிக்கடி கண்காணிக்கப்படுகிறது.

அனைத்து உபகரணங்களும் சர்வதேச நியமங்களுக்கமைவான துல்லியத்தன்மை மற்றும் சுவடுகாண் தன்மை ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்கில்  இலங்கை கட்டளைகள் நிறுவகத்தால் அளவை திருத்தம் செய்யப்பட்டுள்ளன.