சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு துரித அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளுக்கு தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான உள்ளீடுகளை வழங்குவதன் மூலம் நிலையான அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் முகாமைத்துவத்தை உறுதி செய்யும் நோக்கில் 1986ஆம் ஆண்டில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு தொழில்நுட்ப சேவை பிரிவாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த காலங்களில் சூழல் தொடர்பான விடயங்களில் ஆலோசனை மற்றும் பரிசோதனை சேவைகள் வழங்கும் பிரதான அங்கமாக மாறியுள்ளது. கைத்தொழிலாளர்கள், அபிவிருத்தியாளர்கள் மற்றும் அரசாங்க செயற்த்திட்டங்கள் ஆகியவற்றுக்கு அவற்றின் சட்ட தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யவும் சுற்றாடல் ஒழுங்குவிதிகள் போன்றவற்றுடன் இணக்கத்தை வெளிப்படுத்தவும் வேண்டிய ஆலோசனை மற்றும் கண்காணிப்பு சேவைகளை தற்போது சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு வழங்கிவருகிறது. சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவின் நிபுணர் குழு கள ஆய்வுகள், மாதிரி மற்றும் பகுப்பாய்வு, கண்காணிப்பு, வியாக்கியானம் கூறல் மற்றும் ஆலோசனை சேவைகள் வழங்கல் மற்றும் சுற்றாடல் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் நாடளாவிய ரீதியில் சேவைகளை வழங்கி வருகின்றனர்.

 

வழங்கப்படும் சேவைகள்

சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு கள ஆய்வுகள் முதல் இறுதி அறிக்கைவரை முழுமையான சுற்றாடல் சேவைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கிவருகிறது. இந்த சேவைகளை வழங்க இப்பிரிவின் அதி நவீன உபகரணங்கள்பெரிதும் துணை புரிகின்றது.