நாட்டின் மிகப்பழைய வளியின் தர கண்காணிப்பு நிறுவனம் என்ற வகையில் தேசிய வாயு தர கண்காண்ப்பிற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளது.

வளி மாசடைதல் முகாமைத்துவம் தொடர்பான அனைத்து தேசிய குழுக்கள் மற்றும் கலந்துரையாடலின் போதும் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவின் வளி தர பிரிவு அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும் குறித்த தேசிய குழுக்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு தொழில்நுட்ப சேவை வழங்குனராக மட்டுமன்றி சுற்றுப்புற வளியின் நிலை தொடர்பான தரவுகளையும் இப்பிரிவு வழங்கியுள்ளது. மேலும் இப்பிரிவு நாட்டின் வளியின் தரம் தொடர்பான மிகப்பாரிய தரவு தளத்தை கொண்டிருப்பதுடன் அவற்றை தேசிய மற்றும் சர்வதேச செயலமர்வுகள் மற்றும் மகாநாடுகளில் துறைசார் நிபுணர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

தற்போது வளி தர பிரிவிடம் நிபுணத்துவ ஊழியர்கள் மற்றும் கள மற்றும் ஆய்வுகூட கண்காணிப்பு உபகரணங்கள் காணப்படுகின்றன. மேலும் இப்பிரிவானது ஆய்வுகளை மேற்கொண்டு கண்காணிப்பு செலவுகுறைந்த வளி தர கண்காணிப்பு உபகரணங்களை கண்டுபிடித்துள்ளது.

aqcoordinatorதிரு. எச்.டி.எஸ். பிரேமசிறி
இணைப்பாளார் / சிரேஷ்ட விஞ்ஞானி - வளி தர கற்கைகள்

+94 112 588 946 Ext: 600
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வீதி அபிவிருத்தி செயற்த்திட்டங்கள்

  • தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (மாத்தறை முதல் பெலியத்தை வரை) - சீனா தேசிய விமான தொழில்நுட்ப சர்வதேச பொறியியல் கூட்டுத்தாபனம்
  • தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரை அந்தரவேட ஊடாக) - வரையறுக்கப்பட்ட சீனா துறைமுக பொறியியல் கம்பனி
  • தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (பெலியத்த முதல் வெட்டிய வரை) - வரையறுக்கப்பட்ட சீனா அரச நிர்மாண பொறியியல் கூட்டுத்தாபனம்
  • வவுனியா-ஹொரவப்பொத்தான (ஏ 029) - அக்ஸஸ் என்சினியரிங்க் கம்பனி
  • வவுனியா-ஹொரவப்பொத்தான - எட்வேர்ட் மற்றும் கிறிஸ்டி பிறைவட் லிமிட்டட்
  • கெரவலப்பிட்டிய முதல் கடவத்தை வரை - வெளிச்சுற்று வட்ட நெடுஞ்சாலை (கட்டம் 3) செயற்த்திட்டம்

சூழல் பாதிப்பு மதிப்பீட்டிற்கான முதற்கட்ட கள தகவல் சேகரிப்பு

  • ருவன்புற நெடுஞ்சாலை - ஸ்கில் இண்டர்நஷனல் பிறைவட் லிமிட்டட்
  • கழிவில் இருந்து சக்தி உருவாக்கும் செயற்த்திட்டம் - மஹர - ஈ.எம்.எல். பிறைவட் லிமிட்டட்
  • கிறிஸ் கோபுர செயற்த்திட்டம் - கொழும்பு - ஈ.எம்.எல். பிறைவட் லிமிட்டட்

நிர்மாண செயற்த்திட்டங்கள்

  • கண்டி நகர கழிவு நீர் முகாமைத்துவ செயற்த்திட்டம் - ஜெ.எப்.ஈ பொறியியல் கூட்டுத்தாபனம்
  • நீர்முக இணைந்த உல்லாச நகர் செயற்த்திட்டம் (HKN இணைந்த செயற்த்திட்டம்) - வரையறுக்கப்பட்ட ஹையுண்டாய் பொறியியல் மற்றும் நிர்மாண கம்பனி
  • வவுனியா நீர் செயற்த்திட்டம் - சியரா நிறுவனம்
  • கொழும்பு கழிவு நீர் முகாமைத்துவ செயற்த்திட்டம் - ஆர்.என் நிறுவனம்
  • கொழும்பு கழிவு நீர் முகாமைத்துவ செயற்த்திட்டம் - எல் அண்ட் ரி நிறுவனம்

கைத்தொழில் துறை ஆலோசனை சேவைகள்

  • கஸ்மோ லோட்ஸ்டார் பிறைவட் லிமிட்டட்
  • டீசல் அண்ட் மோட்டார் பொறியியல் கம்பனி
  • இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
  • ஹன்வெல்ல இறப்பர் நிறுவனம், பஹத்கம, ஹங்வெல்ல
  • வரையறுக்கப்பட்ட ஆஸிரி வைத்தியசாலை
  • மெர்பொக் எம்.டி.எப். லங்கா பிறைவட் லிமிட்டட் - ஹொரண

சுற்றுப்புற வாயுவின் தரம்

  • நைதரசன் டையொக்ஸைட் (NO2)
  • சல்பர் டையொக்ஸைட் (SO2)
  • தற்காலிகமாக நீக்கப்பட்ட துகள்மப்பொருள் (Suspended particulate matter)
  • துகள்மப்பொருள் (PM 10 & PM 2.5)
  • கார்பன் மொனொக்ஸைட் (CO)
  • கார்பன் டையொக்ஸைட் (CO2)
  • ஓசோன் (O3)
  • ஈயம்  (Pb)
  • துரிதமாக ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் (Volatile Organic Compound)

உள்ளக வாயுவின் தரம்

  • துரிதமாக ஆவியாகும் கரிமச் சேர்மங்களின் மொத்தம் (Total Volatile Organic Compounds)
  • கார்பனிக் அசிட் (H2CO)
  • RH & T
  • நைதரசன் டையொக்ஸைட் (NO2)
  • சல்பர் டையொக்ஸைட் (SO2)
  • துகள்மப்பொருள் (PM 10)
  • கார்பன் மொனொக்ஸைட் (CO)
  • ஓசோன் (O3)

புகை குழாய் தொகுதி புகை (அனல் வாயு பகுப்பாய்வு)

  • சல்பர் டையொக்ஸைட் (SO2)
  • நைதரசன் டையொக்ஸைட் (NOx)
  • கார்பன் மொனொக்ஸைட் (CO)
  • கார்பன் டையொக்ஸைட் (CO2)
  • வெப்பநிலை
  • கன உலோகம்
  • தற்காலிகமாக நீக்கப்பட்ட துகள்மப்பொருட்களின் மொத்தம் (Total Suspended Particulate Matter)
  • ஒட்சிசன் (O3)

ஒலி

  • பகல் நேரம்
  • இரவு நேரம்

ஏனையவை

  • Cl
  • Acid mist
  • NH3

அதிர்வு
வெளிச்ச மட்டங்கள்
RH & T


RMV செயற்த்திட்டம்

இலங்கையின் பிரதான நகரங்களின் சுற்றுப்புற வாயுவின் தரத்தை கண்காணிக்கும் செயற்த்திட்டம் 2012ஆம் ஆண்டு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன புகை பரிசோதனை செயற்த்திட்டம் மூலம் வாகன புகை பரிசோதனை நம்பிக்கை நிதியத்திலிருந்து வழங்கப்பட்டது. இந்த செயற்த்திட்டம் 2016 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இடம்பெற்றது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த செயற்த்திட்டத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வாகன புகை பரிசோதனை கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திட்டத்தின் கண்காணிப்பாளராக செயற்பட்டது. சுத்தமான காற்று 2012 எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி திட்டத்தின் முக்கிய நோக்கம் வாகன புகைவெளியிடலை கட்டுப்படுத்துவதன் மூலம் காற்றின் தரத்தை அதிகரிப்பதை நோக்காக கொண்டுள்ளது. இந்த செயற்த்திட்டத்தின் கீழ் கொழும்பு, கம்பஹா, ஹொரணை, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி, குருனாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களின் சுற்றுப்புற வளியின் தரம் கண்காணிக்கப்பட்டது.

இந்த செயற்த்திட்டத்தின் கீழ் போதுமானளவு தகவல்கள் களத்திலும் ஆய்வுகூட பகுப்பாய்வுகளிலும் சேகரிக்கப்பட்டன. மேலும் இந்த ஆய்வுகளின் முடிவுகள் வாகன புகை பரிசோதனை வழிப்படுத்தும் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் வாயு தொடர்பாக இடம்பெற்ற மகாநாடுகளிலும் பகிரப்பட்டுள்ளன.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயு தர கற்கைகள் கண்காணிப்பு பிரிவு சுற்றுப்புற வாயு மாசுக்களை கண்காணிப்பு கருவிகளை கண்டறிந்ததுள்ளதுடன் அவற்றின் தரத்தையும் பேணி வருகிறது. It captures pollutants in the ambient air and analysis in the laboratory using standard wet analyses methods; NO2 – Saltzman’s method (Colorimetry) and SO2 - Ion Chromatography (IC) method.

இக்கருவிகள் மூலம் 10 மாவட்டங்களின் பிரதான நகரங்களின் வாயு மாதிரிகள் மாதாந்தம் சேகரிக்கப்படுகிறது.. இது மொத்தம் 4312 மாதிரிகளை உள்ளடக்குகின்றது.

உயிர்ப்பற்ற வாயு மாதிரி

உயிர்ப்பற்ற வாயு மாதிரி கருவி

நகரம் இடங்களின் எண்ணிக்கை நகரம் இடங்களின் எண்ணிக்கை
கொழும்பு 19 இரத்தினபுரி 8
கம்பஹா 11 கண்டி 13
ஹொரண 5 குருநாகல் 6
களுத்துறை 5 அனுராதபுரம் 5
காலி 6 பதுளை 2016 ஜூலை இல் அரம்பிக்கப்பட்டது

அதனடிப்படையில் மாதாந்த அடிப்படையில் SO2 மற்றும் NO2 மட்டங்கள் 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை கண்காணிக்கப்பட்டது. இதன் போது குறிப்பிடத்தக்களவு தாக்கவிளைவுகள் உணரப்படவில்லை. எனினும் கடந்த காலங்களில் அதிகமட்ட வாயு நிலைகளை கொண்ட நகரங்களில் இவ்வாண்டும் அதே மட்டமே காணப்பட்டது. மேலும் அதிக வாயு மாசு மட்டங்கள் வாகன நெரிசல் உள்ள பகுதிகளிலேயே அதிகம் பதிவாகியுள்ளன. அதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் காலி ஆகிய நகரங்களில் ஏனைய நகரங்களை விட உயர் வாயு மாசு மட்டம் பதிவாகியது. அனைத்து இடங்களிலும் SO2 மற்றும் NO2 சராசரி மட்டங்கள் தேசிய சுற்றுப்புற வாயு தர மட்டங்களுக்கமைவாகவே காணப்பட்டன. எனினும் கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி ஆகிய இடங்களின் சராசரி மட்டங்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டி மட்டத்தினை விட அதிகமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நகரிலும் SO2 இன் செறிவு

2016 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நகரிலும் NO2 இன் செறிவு

திரு. பி.டி.எஸ். பிரேமசிறி, இணைப்பாளார், வாயு தர கற்கைகள் பிரிவு அவர்கள் இந்த செயற்த்திட்டத்தின் பிரதான விஞ்ஞானியாக பணியாற்றியதுடன் இந்த செயற்த்திட்டத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் உரிய நேரத்தில் நிறைவேற்றவும் தரமான ஆய்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளவும் காரணமாக இருந்தார்.