இரசாயன அனர்த்த இடர்

 

கடந்த தசாப்தத்தில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி காரணமாக இலங்கை இரசாயன அனர்த்தங்களை ஆரம்பகாலங்களை
விட தற்போது அடிக்கடி எதிர்கொள்ளுகிறது. தீ, வெடிப்புக்கள், கசிவு அல்லது நஞ்சுசார்ந்த மற்றும் ஆபத்து விளைவிக்க
கூடிய பொருட்கள் காரணமாக பொதுமக்களுக்கு நோய்கள், காயங்கள், அங்கவீனங்கள் அல்லது மரணங்கள், சொத்துக்கள்
மற்றும் இயற்கை சூழல் மீதான தாக்கங்கள் ஆகியன ஏற்படுகின்றன. சூழல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவானது
இரசாயன கசிவுகள் மற்றும் கைத்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கசிவுகள் ஆகியன தொடர்பில் அவற்றின்
பருமன் மற்றும் தாக்கவிளைவு தொடர்பில் பல ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை தடுப்பதற்குரிய முன்மொழிவுகளையும்
வழங்கியுள்ளது.

 

ஆய்வின் நோக்கங்கள்
• இரசாயன தொழிற்சாலைகள் எதிர்கால இரசாயன அனர்த்த நிலைமைகள் தொடர்பில் தகவல் முறையை தயாரித்தல்
• இரசாயன அனர்த்த இடர் தொடர்பான முறையான இயல்பு மதிப்பீட்டு முறைமயை உருவாக்கல்
• இரசாயன பாவனை தொடர்பில் வழிகாட்டிகளை தயாரிப்பதன் மூலம் கொள்கை மற்றும் சட்ட ஏற்பாடுகளை பலப்படுத்தல்

 

  ஆய்வின்முடிவுகள் 

 

எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றின் நிலக்கீழ் தாங்கியொன்று துருப்பிடித்ததன் காரணமாக 2016ஆம் ஆண்டில்
நில்வல கங்கையில் ஏற்பட்ட மசகுஎண்ணெய் கசிவு, 2015 டிசம்பரில் நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையில்
ஏற்பட்ட “Thinner” குழாய் வெடிப்பு காரணமாக உண்டான கசிவு, களனி கங்கையில் ஆகஸ்ட் 2015இல் குடிபான
தொழிற்சாலையொன்றின் நிலக்கீழ் எரிபொருட் குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் உண்டான மசகு எண்ணெய் கழிவு
மற்றும் சலவைத்தூள் தயாரிப்பாளர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட இரசாயன கழ்வுகளௌ சூழலில் வெளியேற்றியமை
ஆகிய சம்பவங்கள் அண்மைக்காலங்கள் இலங்கையில் இடம்பெற்ற இரசாயன அனர்த்தங்கள் ஆகும். இத்தகைய
இரசாயன அனர்த்தங்கள் உண்டாக போதிய பராமரிப்பு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகள் இன்மையே காரணமாகும்.
அவற்றைவிட இரசாயன அனர்த்தங்களை முகாமை செய்வதற்கான கொள்கைகளுல் நாட்டில் காணப்படாமை நாட்டில்
உண்டாகும் இரசாயன அனர்த்தங்களுக்கான பிரதான காரணியாக அமைகிறது.

 

கைத்தொழிற்சாலைகள் தொழில்வகை பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் ஆபத்து துலங்கல் திட்டங்களை கொண்டிருக்கின்ற போதும் அனர்த்த நேரங்களில் சுற்றுச்சூழல் மற்றும் அயல் சமூகத்தவர் ஆகியோருக்கு உண்டாக கூடிய பாதிப்புக்களை பெரும்பாலும் அவை உள்ளடக்கவில்லை. இந்த செயற்த்திட்டம் மூலம் இரசாயன பதார்த்தங்களை உபயோகிக்கும் கைத்தொழிற்சாலைகளுக்கு அனர்த்த முகாமைத்துவ திட்டங்களை தயாரிக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. இதனை நோக்காக கொண்டு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த ஆய்வினை இரசாயன அனர்த்தங்களை தடுப்பதற்கான கொள்கையினை தயாரிக்கும் நோக்கிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பயன்படுத்தியது.