English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு பிரிவுகள் செயற்திட்ட முகாமைத்துவ பிரிவு

செயற்திட்ட முகாமைத்துவம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பிற்கு கட்டடக் கலை சேவைகள் மற்றும் சிவில் இலத்திரனியல் மற்றும் இயந்திரங்கள் பொறியியல் போன்ற சேவை வழங்கும் செயல்முறைப் பொறியியல் முறைமையாக முகாமைத்துவப் பிரிவு விளங்குகின்றது. பட்டயம் பெற்ற பொறியியலாளர்கள், பட்டயம் பெற்ற கட்டிடக் கலைஞர்கள், தொகை மதிப்பீட்டாளர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், திட்டமிடலாளர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய உதவியாளர்கள் போன்ற சேவை நிலைய நிபுணர்கள் மற்றும் கட்டமைப்பு சார் பொறியியலாளர்கள், சேவை வழங்கும் பொறியியலாளர்கள் மற்றும் இலத்திரனியல் தொழில் நுட்பப் பொறியியலாளர்கள் ஆகியோரைக் கொண்ட பகுதிநேர நிபுணர்களையும் கொண்ட செயற் திறன் மிக்க தொழில் சார் பதவியொன்று செயற்திட்ட முகாமைத்துவப் பிரிவில் பணியாற்றுகின்றனர். மனிதனால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பற்ற நிலையைக் குறைக்கும் அதே நேரம், அழகான, பாதுகாப்பான, நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய கட்டிட மற்றும் ஏனைய கட்டமைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைக்கும் ஆலோசனைச் சேவைகளை இப்பிரிவு வழங்குகின்றது.

செயற்திட்ட முகாமைத்துவப் பிரிவின் தலைவருடன் தொடர்பு கொள்வதன் மூலம் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

புதன்கிழமை, 01 ஆகஸ்ட் 2012 05:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
இற்றைப்படுத்தியது: 20-05-2013.