English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு எம்மைப் பற்றி தற்போதைய NBRO

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் தற்போதைய நிலை

1964 ஆம் ஆண்டிலே உருவாக்கப்பட்ட தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பானது தேசத்திற்கு இடரல்லாத சூழலொன்றினை உருவாக்கும் பொருட்டு அதற்காக அர்ப்பணித்துள்ள பல்வேறு துறையினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் பலர் ஒன்றிணைந்துள்ள வெற்றிகரமான தொழில்நுட்ப சேவைகள் வழங்குநராகவும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் ஒன்றாகவும் விளங்குகின்றது. சூழலியல், மண்சரிவு மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நில அனர்த்தங்கள், மக்கள் குடியிருப்புக்கள் வடிவமைப்பு, பொறியியல் துறை சார் முகாமைத்துவம், நிலம் சார்ந்த தொழில் நுட்பம் பற்றிய பொறியியல் துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் பற்றிய பொறியியல் துறை பற்றிய மிகவும் பரந்த வட்டத்தில் போதனையாளர் உள்ளிட்ட முக்கிய அமைச்சுகள் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பிடம் காணப்படுகின்றது. பல வருடங்களாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பானது திறனாற்றல் மிக்க ஆராய்ச்சி நிறுவனமொன்றாகத் தமது கொள்ளளவினை விருத்தி செய்து கொண்டுள்ளது. தற்போது அது அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஆராய்ச்சி நிறுவனமாக செயற்படுகின்றது. தமது வாழ்க்கை சூழலினுள் நாடு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் இனங் காணப்பட்டுள்ளது. உயர் வாழக்கைத் தரமொன்றினை விருத்தி செய்வதற்குத் தேவையன தீர்வுகளை இனங் காண்பதற்கு இவ்வமைப்பு திடசங்கற்பம் பூண்டுள்ளது.

இடர் முகாமைத்துவ அமைச்சினால் ஒப்படைக்கப்படும் பொறுப்புக்களுக்கு ஏற்றவாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் குறிக்கோள்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இடர் நிலைகள் குறைப்பதற்கான பிரதான குறிக்கோளின் மீது கவனம் செலுத்தி அனைத்துப் பணிகளையும் மீள் திட்டமிடலுக்கு உட்படுத்தியுள்ளது. சுய உழைப்பின் மீது தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பானது இயங்கி வருவதுடன் அவ்வமைப்பின் பெரும்பாலான நிதி வருமானங்கள் அரசாங்கத்திற்கும், தனியார் துறைக்கும் பெற்றுக் கொடுக்கப்படும் ஆலோசனை சேவைகள் மற்றும் பரிசோதனை சேவைகள் மூலம் பெற்றுக் கொள்கின்றது.

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013 15:58 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
இற்றைப்படுத்தியது: 12-04-2014.