English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு சூழலியல் பரிசோதனை

சூழலியல் பரிசோதனைகள்

ஆய்வு கூடங்களின் சாத்தியவளம்

சுற்றுச் சூழலிலுள்ள நீர், சீராக்கம் செய்த நீர், தொழில் நுட்ப கழிவு நீர், மண், சுற்றுச் சூழலிலுள்ள வாயுவின் தன்மை, ஒலி மற்றும் அதிர்வு மட்டத்தை அளவிடல் மழை உச்சிகள் மற்றும் புகைவழி (Stack & flue) என்பவற்றினை பகுப்பாய்வு செய்தற்கும், கட்டிட நிர்மாணத்திற்கான பொருட்களை பரீட்சிப்பதற்கும் தேவையான கருவிகளைக் கொண்ட பூரண ஆய்வுகூடமொன்று இப்பிரிவிடம் காணப்படுகின்றது.

சேவைகள்

சூழலியல் நற்தன்மையினைப் பரீட்சித்தல், இசைவுறும் தன்மையினை பரீட்சித்தல், பின்னூட்டல் மற்றும் அடிப்படை சூழலியல் மதிப்பீடுகளை மேற்கொள்ளல், சூழல் தாக்கங்கள் பற்றிய மதிப்பீடு மற்றும் SEA மேற்கொள்வதற்கான தகைமை பெற்ற நிறுவனம் ஒன்று என்ற வகையில் இதன் சூழலியல் பிரிவானது, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சூழலியல் துறையில் மேற்படி சேவைகளுக்கு மேலதிகமாக நிர்மாணக் கைத்தொழில் துறையில் கட்டடப் பொருட்கள் சர்வதேச தரத்திற்கேற்ப காணப்படுகின்றனவா என்பது தொடர்பாக பரீட்சிப்பதற்கு இப்பிரிவானது தமது இயலளவினை அதிகரித்துக் கொண்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சூழலியல் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான சிறு விளக்கமொன்று கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலே

காற்றின் நற்தன்மை பற்றிய பின்னூட்டல்

  • சூழலியல் பாதுகாப்பு மற்றும் அதன் நற்தன்மை என்பவற்றினை முகாமைத்துவம் செய்வதற்காக சுற்றுச் சூழலிலுள்ள காற்றின் நற்தன்மையினை பின்னூட்டல் செய்தல். (மேலும் வாசிக்கவும்)
  • அபிவிருத்தி மற்றும் நிர்மாண செயற்திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் வளியின் நற்தன்மை பற்றிய பின்னூட்டல்.
  • ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக சுற்றுச் சூழல் வளியின் நற்தன்மை பற்றிய பின்னூட்டல்.
  • ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக சுற்றுச் சூழல் வளியின் நற்தன்மையினைப் பரீட்சித்தல்.
  • ஒழுங்குபடுத்தல் தேவைகள் மற்றும் சர்வதேச நற்தன்மை பற்றிய தேவைகளுக்காக வீட்டிற்கு உள்ளே காணப்படும் காற்றோட்டத்தின் தன்மையினைப் பின்னூட்டல் செய்தல்.
  • புகைவழி மற்றும் புகைக் குழாய்கள் என்பன பற்றிய பரீட்சித்தல்.
  • தற்போதுள்ள அல்லது நிகழக் கூடிய புதிதாக அமைக்கக் கூடிய புகைவழி மற்றும் புகைக் குழாய் என்பனவற்றின் காற்றோட்ட விஸ்தரிப்பு மாதிரி.

மேலே

நீரின் தன்மை பற்றிய பின்னூட்டல்

  • குடிப்பதற்குப் பொருத்தமற்ற நீர் பற்றி ஆலோசனை வழங்குவதற்காக நீரினை பரிசோதித்தல். (மேலும் வாசிக்கவும்)
  • தொழில்நுட்பக் கழிவு நீரின் தன்மை பற்றிய பின்னூட்டல். (மேலும் வாசிக்கவும்)
  • மீள் நிறுவுதல் மற்றும் சிகிச்சை ஆய்வுகளுக்கான மதிப்பீடுகள்.
  • சூழலியல் முறைமை பாதுகாப்புப் பற்றிய நீரின் நற்தன்மை பற்றிய பின்னூட்டல்.

மேலே

சத்தத்தின் அளவினை அளவிடல்

  • சூழலியல் பாதுகாப்பு மற்றும் நற்தன்மை முகாமைத்துவம் என்பவற்றிற்காக சுற்றுச் சூழலின் சத்தத்தைக் கணித்தல் (மேலும் வாசிக்கவும்)
  • அபிவிருத்தி மற்றும் நிர்மாண செயற்திட்டங்களுக்கான சத்தத்தின் அளவீடு.
  • ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக சத்தத்தின் மட்டத்தை அளவிடல்.
  • ஒழுங்குபடுத்தல் தேவைகள் மற்றும் சர்வதேச ரீதியான நற்தன்மையின் அளவீடுகளுக்காக வீட்டிற்கு உட்புறமாகக் காணப்படும் சத்தத்தை அளவிடல்.

மேலே

அதிர்வு மட்டம்

  • ஒழுங்குபடுத்தல் தேவைகளுக்காக கட்டமைப்பு மற்றும் நிலத்தின் அதிர்வுத் தன்மையினை அளவிடல். (மேலும் வாகிக்கவும்)
  • சூழலியல் பாதுகாப்பு மற்றும் நற்தன்மை முகாமைத்துவத்திற்காக கட்டமைப்பு மற்றும் பூமியின் அதிர்ச்சி மட்டத்தை அளவிடல்.
  • அபிவிருத்தி மற்றும் நிர்மாண செயற்திட்டங்களுக்காக கட்டமைப்பு மற்றும் பூமி அதிர்ச்சி மட்டத்தை அளவிடல்.

மேலே

கட்டிடப் பொருட்கள் பற்றிய இரசாயனப் பரிசோதனை

  • நிர்மாணப் பணிகளுக்காக மண், மென்மை மற்றும் கரடுமுரடான தன்மை. (மேலும் வாசிக்கவும்)
  • நிர்மாணப் பணிகளுக்காக சீமேந்துத் தன்மை.

மேலே

நிகழ்காலம் உள்ளிட்ட பின்னூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள்

  • உள்நாட்டுப் பிரதான மின் உற்பத்தி நிலையங்களுக்கான தானியக் குவியல் பின்னூட்டல் பணிகள். (மேலும் வாசிக்கவும்)
  • வீதி அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக வளி மற்றும் நீர் என்பவற்றினைப் பின்னூட்டல் செய்தல். (மேலும் வாசிக்கவும்)

மேலே

சூழல் முகாமைத்துவம்

  • சூழல் தாக்கங்களை மதிப்பிடல்.
  • அடிப்படை சூழல் பரிசோதனை.
  • அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு சூழல் முகாமைத்துவத் திட்டங்களைத் தயாரித்தல்.
  • சூழலியல் கணக்காய்வு/ஆய்வு

மேலே

கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப் பாடநெறிகள்

  • சூழலியல் நற்தன்மை பின்னூட்டல், மதிப்பீடு மற்றும் முகாமைத்துவம் பற்றிய பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, பல்கலைக்கழகங்கள், கைத்தொழில்கள் போன்ற அரச மற்றும் தனியார் அமைப்புக்களுக்கு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் நிபுணர்கள் நாளாந்தம் மேற்கொள்கின்றனர். செயல் முறைப் பயிற்சிக்காக ஆய்வுகூட வசதிகளும் உள்ளன. மேலதிக விபரங்களுக்கு சூழலியல் பிரிவின் பிரதிப் பணிப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.
  • அனுபவம் மிக்க விஞ்ஞானிகளின் கண்காணிப்பின் கீழ் சூழலியல் பிரிவில் பல்வேறு ஆராய்ச்சி மாணவர்கள் தமது மட்டத்திற்குத் தேவையான ஆய்வுகள் அல்லது பட்டப்பின் படிப்பு ஆராய்ச்சிச் செயற்திட்டங்களை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

மேலே

சூழல் மாசடைவதைக் கட்டுப்படுத்தல்

  • பின்வரும் விடயங்களுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொடுத்தல்.
  • வளி வெளியாதல் மற்றும் மாசடைவு கட்டுப்பாட்டினை முகாமைத்துவம் செய்தல்.
  • சத்தம் வெளியாதல் மற்றும் மாசடைவு கட்டுப்பாட்டு முகாமைத்துவம்.
  • அதிர்வுக் கட்டுப்பாடு மற்றும் முகாமைத்துவம்.
  • சுpறிய அளவிலான கைத்தொழில்களுக்கான கழிவு நீர் செப்பமிடல் மற்றும் முகாமைத்துவம்.

மேலே

தரங்களுக்கு இசைவுறல் பற்றிய ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிசோதனைகள்

  • 2008 ஆகஸ்ட் மாதத்தின் இலக்கம் 1562/22 உடைய அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, தேசிய சுற்றாடல் (சுற்றுச் சூழல் காற்றோட்டத்தின் நற்தன்மை), 2008 ஒழுங்குபடுத்தல்களின் பிரகாரம் காட்டப்பட்டுள்ள சுற்றுச் சூழல் காற்றோட்டத்தின் நற்தன்மை மற்றும் தரத்திற்கேற்ப விதந்துரைக்கப்பட்ட காற்றோட்டத்தின் நற்தன்மை மற்றும் தரம்.
  • நீரின் நற்தன்மை பற்றிய தரம் - குடி நீரின் தன்மை - SLS பகுதி 1, பகுதி 11 6141984
  • சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்திற்கான கழிவு நீரின் தன்மை. (அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் 1534/60)
  • பெயரிடப்பட்ட நீர் பாவனைகளுக்காக மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் உத்தேசிக்கப்பட்ட நிலத்தின் மீது சுற்றுச் சூழல் நீரின் தன்மை.
  • NO2, SO2, CO2, VOC, Pm10, Pm 25 போன்ற வீட்டு உட்புறக் காற்றோட்டத்தின் தன்மை மற்றும் தரம்.
  • 1996 மே மாதம் இலக்கம் 924/12 உடைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் விதிக்கப்பட்டுள்ள தேசிய சூழலியல் (ஒலிமட்டம் ஒழுங்குபடுத்தல், 1996 பிரகாரம் தேசிய சத்த ஒழுங்குபடுத்தல்களில் காணப்படும் ஒலி மட்டம்)
  • உத்தேச இடைக்கால அதிர்வு தரங்களுக்கேற்ப காணப்படும் அதிவு மட்டங்கள்.

மேலே

புதன்கிழமை, 01 ஆகஸ்ட் 2012 05:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
இற்றைப்படுத்தியது: 14-06-2013.