- காணிகளில் மண்சரிவு ஏற்படுவது தொடர்பான வலயங்களை வரைபடமாக்கல்.
- காணிகளில் மண்சரிவு ஏற்படுவது பற்றிய அனர்த்தத்தை இனங்காணல் மற்றும் மண்சரிவு அபாய நிலையை மதிப்பிடல்
- மண்சரிவு பற்றிய ஆய்விற்கான கோரிக்கைகளை சமர்ப்பித்தல்
- மலைசார்ந்த பிரதேசங்களில் நிர்மாணம் மற்றும் காணி பயன்பாட்டுத் திட்டங்களுக்கான வழிகாட்டல்கள்
- காணிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான தாக்கங்களைத் தளர்த்துதல்
- விழிப்பூட்டல் மற்றும் பயிற்சியளித்தல் நிகழ்ச்சித் திட்டங்கள்
- மண்சரிவு பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தல்
- மண்சரிவுத் தரவு முறைமை
காணிகளில் மண்சரிவு ஏற்படக் கூடிய வலயங்களை வரைபடமாக்கல்.
இலங்கையில் மண்சரிவுகளுக்கு உட்படும் 10 மாவட்டங்களின் மண்சரிவு பற்றிய அபாயங்களை வலய ரீதியாக பிரிக்கும் பொருட்டு. அதனை வரைபடமாக்கும் நிகழ்ச்சித் திட்டமொன்று தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் காணிகளில் மண்சரிவு ஏற்படல் தொடர்பான ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவினால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆந்த 10 மாவட்டங்களாவன களுத்துறை, காலி, அம்பாந்தோட்டை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, கேகாலை, இரத்ததினபுரி, மாத்தறை மற்றும் பதுளை என்பனவாகும். வரைபானது 1 : 50,000 மற்றும் 1 : 10,000 அளவுத் திட்டத்திற்கு ஏற்ப மேற் கொள்ளப்பட்டுள்ளது. காணிகளில் மண்சரிவு ஏற்படக் கூடிய ஒவ்வொரு வலயங்களுக்கும் பொருத்தமான காணி பயன்பாடு மற்றும் நிர்மாணப் பணிகள் என்பவற்றிற்குத் தேவையான வழிகாட்டல்களை இவ் வரைபடங்களிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
திட்டமிடலாளர்கள், அபிவிருத்தியாளர்கள், தீர்மானம் எடுப்போர் மற்றும் பொதுமக்களுக்கு மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, கோகாலை, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களை முழுமையாக உள்ளடக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட 1 : 50,000 அளவுத் திட்டத்தைக் கொண்ட வரைபடங்களைத் தற்போது பெற்றுக் கொள்ள முடியும்.
1 : 50,000 அளவிலான வரைபடத்தினை தரைவிறக்கம் செய்தல்
பின்வரும் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் மண்சரிவு ஏற்படக் கூடிய 10 மாவட்டங்களினுள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களை உள்ளடக்கும் 1 : 10,000 அளவிலான வரைபடங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

காணிகளில் மண்சரிவு ஏற்பட இடமுள்ள பிரதேசங்கள் காணப்படும் வரைபடங்களில் மண்சரிவு எற்பட இடமுள்ள ஒவ்வொரு பிரதேசங்களினதும் அபிவிருத்திக்கான வழிகாட்டல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
| Legend colour | Landslide hazard zone | Guideline for development |
![]() |
மண்சரிவு ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ள பிரதேசங்கள் | அனர்த்தமொன்றினால் சிக்கக் கூடிய, உயிர் மற்றும் உடமைகள் என்பவற்றிற்கு ஆபத்துமிக்க அச்சுறுத்தலொன்று காணப்படுகின்றது. அதனால் புதிய நிர்மாணங்களுக்கு இடமளித்தல் கூடாது. உத்தரவாதம் பெற்ற நிபுணர்களினால் நிலம் பரீட்சிக்கப்பட்டதன் பின்னர் குறிக்கப்படும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தற்போது காணப்படும் கட்டமைப்புக்களுக்குத் தேவையான ஒன்று சேர்த்தல்களுக்கு இடமளிக்க முடியும். மண்சரிவு அறிகுறிகள் தெளிவாக இருப்பின் மற்றும் ஆபத்தின் அறிகுறிகள் அதிகமாகக் காணப்படின் முன்கூட்டியே அனர்த்த எச்சரிக்கை விடுகின்ற முறைமை பொருத்தப்படல் வேண்டும். |
![]() |
மண்சரிவு எதிர்பார்க்க முடியும் |
மண்சரிவு ஏற்படுவதற்கான நடுநிலையான தன்மை காணப்படுகின்றது. புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்கக் கூடாது. பள்ளத்தாக்கான தன்மையினை இடைநிறுத்தித் தடுப்பதற்காக விருத்தி செய்த பாணி பயன்பாட்டுத் திட்டங்களை அறிமுகம் செய்தல் வேண்டும். சுகல புதிய நிர்மாணங்களையும், புனரமைப்புக்களையும், புதிய செயற்திட்டங்களையும் மண்சரிவு ஆபத்து மதிப்பீட்டிற்கு உட்படுத்தல் வேண்டும். |
![]() |
மண்சரிவு ஏற்படுவதற்கான தன்மை ஓரளவு காணப்படுகின்றது | காணிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான ஆபத்து மிகவும் குறுகிய அளவில் காணப்படுகின்றது. பொறியியல் உதவியினைப் பெற்ற ஒழுங்குபடுத்தப்பட்ட புதிய நிர்மாணங்களுக்கும் நன்கு திட்டமிட்ட பயிர்ச்செய்கைகளுக்கும் இடமளிக்க முடியும். நிர்மாணப் பணிகளுக்கு திட்டமிடல் பணிகளை தொழில்நுட்ப ரீதியில் பரீட்சித்து உறுதி செய்தல் வேண்டும். |
![]() |
காணிகளில் மண்சரிவு எற்படாத நிலையொன்று காணப்படுகின்றது. | தற்போது காணப்படும் அறிவிற்கேற்ப பள்ளத்தாக்கின் நிலையற்ற தன்மை அல்லது ஆபத்து நேர்வதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. முக்கியமாக நன்கு முகாமைத்துவம் செய்த காணிகள் மற்றும் பொறியியல் ஒத்துழைப்புப் பெற்ற நிர்மாணங்களுக்குப் பொது வரையறைகளை விதிக்க வேண்டியதில்லை. முக்கியமாக வெள்ளப் பெருக்கு மற்றும் மண் அரிப்பிற்கு உட்படுகின்ற பிரதேசங்களில் இடத்திற்குரிய வரையறைகளை விதித்தல் பொருத்தமானதாக அமையலாம். |
காணிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயத்தை இனங்காணல் மற்றும் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயத்தை மதிப்பீடு செய்தல்
பல்வேறுபட்ட அமைப்புக்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் தனிப்பட்ட நபர்களின் வேண்டுகோளின் பிரகாரம் தேசிய கட்டட ஆய்வு அமைப்பின் காணிகளில் மண்சரிவு ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவு இந்நாட்டின் பல்வேறு இடங்களில் காணிகளில் மண்சரிவு ஏற்படுவதை இனங்காணல் மற்றும் காணிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயத்தை மதிப்பீடு செய்தல் என்பன பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைத்துக் கொள்வதற்கான விதந்துரைகளை முன்வைக்கின்றது.
முன்னணி அபிவிருத்தி செயற்திட்டங்கள், கற்குழிகள், மண்அகழ்வுகள் என்பற்றிற்கான அனுமதி வழங்கப்படும் நிறுவனங்கள் மேற்கூறியவாறான மண்சரிவு அபாயங்களை இனங்காணல் மற்றும் மதிப்பீடு செய்தல் தொடர்பான அறிக்கைகளைக் கோருவதுண்டு.
2003 மே மாதம் மற்றும் 2007 சனவரி மாதங்களில் இடம்பெற்ற பாரிய அளவிலான அனர்த்தங்களின் போது, பாதிப்பிற்குள்ளான பிரதேசங்களில் உயர் மற்றும் உடமைகளுக்கு மண்சரிவு மூலம் ஏற்படக் கூடிய ஆபத்தான நிலைபற்றி மதிப்பீடு செய்தல் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற கோரிக்கைக்கு மண்சரிவு பற்றிய ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவு உடனடியாக பதிலளித்தது.
மண்சரிவு பற்றி ஆய்வுகளை மேற்கொள்வதற்கான கோரிக்கைகளை சமர்ப்பித்தல்.
மண்சரிவு பற்றிய ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவிடம் சேவை ஒன்றிற்கு விண்ணப்பிப்பதற்கான படிவம். ஆங்கிலம் | சிங்களம் | தமிழ்
மலைப் பிரதேசங்களில் கட்டிட நிர்மாணம் மற்றும் காணிப் பாவனை திட்டங்கள் பற்றிய வழிகாட்டல்கள்
மலைப் பிரதேசங்களிலே மண்சரிவு ஏற்படக் கூடிய இடங்களில் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் விதம் பற்றிய வழிகாட்டல் அடங்கிய தொகுப்பொன்று தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் மண்சரிவு பற்றிய ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவினால் தயாரிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதன் மூலம் நிர்மாணம் மற்றும் ஏனைய அபிவிருத்திப் பணிகளின் தாக்கங்கள் காரணமாக ஏற்படக் கூடிய மண்சரிவு அபாயங்களைக் குறைக்க முடியும். மேலும், மண்சரிவு அபாயத்தினை மதிப்பீடு செய்வதற்கான ஆய்வொன்றின் பின்னர், காணி பயன்பாட்டு திட்டமிடல், நிர்மாணம் மற்றும் அமுல்படுத்துகின்ற ஏனைய அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஒருசில இடங்களுக்கு ஏற்றவாறு வழிகாட்டல்கள் பெற்றுக் கொடுக்கப்படும்.
![]() |
![]() |
![]() |
மண் சரிவு ஏற்படுவதற்கு இடமுள்ள பிரதேசங்களில் நிர்மாணங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்கள் (ஆங்கிலம்)
மண் சரிவு ஏற்படுவதற்கு இடமுள்ள பிரதேசங்களில் நிர்மாணங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்கள் (சிங்களம் 1)
மண் சரிவு ஏற்படுவதற்கு இடமுள்ள பிரதேசங்களில் நிர்மாணங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்கள் (சிங்களம் 2)
மண்சரிவு பற்றிய ஆய்வுகளுக்கான விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்தல்.
காணிகளின் மண்சரிவு அபாயங்களைக் குறைத்தல்
மண்சரிவுகளின் கட்டுப்படுத்துகை
பேராதனை, பதியபலல்ல, மஹாவௌ மற்றும் கரண்டிஎல்ல ஆகிய இடங்களில் மண்சரிவுகளைக் கட்டுப்படுத்தவதற்காக நான்கு பெரிய கட்டமைப்பு ரீதியான செயற்திட்டங்களை NBRO நடைமுறைப்படுத்தியுள்ளது. பொருத்தமான நிலப்பாவனைச் செயற்பாடுகளை அறிமுகஞ் செய்வதனூடாக மண்சரிவு அபாயங்களை குறைப்பதற்காக கட்டமைப்புரீதியற்ற இரண்டு செயற்திட்டங்களும்கூட பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
பேராதனையில் காணிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயத்தைக் குறைத்தல்
கொழும்பு - கண்டி வீதி மற்றும் பேராதனை நகரிற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 2006 நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட மண்சரிவு நகரிலிருந்து ஒருசில கடைகளுக்கு சேதத்தினை ஏற்படுத்தியதோடு வீதிப் போக்குவரத்துத் தடையினையும் சில வாரங்களுக்கு ஏற்படுத்தியது. பேராதனை என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரிற்கான பிரதான நுழைவாயில்களில் ஒன்றாகும். அதனால் கொழும்பு - கண்டி பிரதான வீதியை பயன்படுத்துவோரின் நலன் கருதியும், பேராதனை நகரில் வசிப்போர் மற்றும் நகரிற்கு வருகை தருவோரின் நன்மை கருதியும் மண்சரிவின் பெறுபேறுகளை இலகுபடுத்த வேண்டியுள்ளது.


காணிகளில் மண்சரிவு ஏற்படல் பற்றிய ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவினால் 2008 நவம்பர் மாதத்தில் புவித் தன்மைகள், புவியியல் மற்றும் நிலத்து நீர் பற்றிய விஞ்ஞான ஆய்வுகள் என்பவற்றினை மேற்கொள்வதன் மூலம் குறைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. புவி தொழில் நுட்பப் பொறியியல் பிரிவினால் புவி தொழில் நுட்ப ஆய்வுகள் நடாத்தப்பட்டன. சூழல் தாக்கங்களை மதிப்பிடல் மற்றும் பின்னூட்டல் செய்தல் என்பன மூலம் சூழலியல் பிரிவினால் பங்களிப்புச் செய்யப்பட்டது. இவ்வாறான பல்லின ஆய்வுகளின் பெறுபேறுகளின் பிரகாரம் மண்சரிவு பற்றிய ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவினால் மட்டம் வெட்டுதல், பலகை வெட்டுதல், கற்களை வெடிக்க வைத்தல் மற்றும் கல்லிற்கு மேற்புறமாக நீர் வடிந்தோடுவதற்கான பாதை அமைத்தல் போன்ற கட்டமைப்பு ரீதியான முறைமைகளினூடாக மண்சரிவுத் தன்மைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இம்மண்சரிவானது மீள ஏற்படக் கூடிய அறிகுறிகள், மண்சரிவு பெறுபேறுகளைக் குறைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள காணிகள் மண்சரிவு பற்றிய ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், அதுபற்றி முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கின்ற அவித்தல், உயில் பாதுகாப்பிற்காக அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கண்டி மாவட்டச் செயலகம் மற்றும் பேராதனை பொலிஸ் நிலையம் என்பவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஒக்தோபர் 15 ஆம் திகதி மு.ப. 2.30மணியளவில் 80.3 மி.மீ மழைவீழச்சி காணப்பட்ட சந்தர்ப்பத்தில் (கன்னொருவ விவசாய ஆராய்ச்சி நிலையம் குறிப்பிட்டதன் பிரகாரம்) மண்சரிவு மீள ஏற்பட்டது. மண்சரிவு பற்றிய ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவினால் நிலையற்ற கற்களை அகற்றி 40 மீற்றர் நீளம் 3.5 மீற்றர் உயரமுடைய உயர் மதிலொன்றினை மூன்று மாத காலப்பகுதியினுள் நிர்மாணித்து 2010 சனவரி மாதத்தில் கண்டி – கொழும்பு வீதியைத் திறப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இச்செயற்திட்டத்தின் மொத்த செலவினம் 80 மில்லியன் ரூபாவாகும். மண்சரிவைக் குறைக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதுடன் 2011 திசெம்பர் மாதத்தில் பூர்த்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
பதியபெலெல்ல மண்சரிவு அபாயத்தைக் குறைத்தல்
வலபனை - ஹங்குரன்கெத்த பிரதான வீதிக்கு அருகில் பதியபெலெல்ல நகரில் மண்சரிவொன்று ஏற்பட்டது. 2007 சனவரி 12 ஆம் திகதி இடம்பெற்ற இம்மண்சரிவு காரணமாக மூன்று வீடுகளுக்கு மேல் அழிவுக்குள்ளானதுடன், வீதியின் வாகனப் போக்குவரத்திற்கும் தடை ஏற்பட்டது. ஹங்குரன்கெத்த மற்றும் வலபனை ஆகிய நகரங்களுக்கு இடையில் காணப்படும் பிரதான நகரம் பதிபெலெல்ல ஆகும். மத்துரட்ட மற்றும் மந்தாரம்நுவர ஆகிய பிரதேசங்களுக்கான பிரதான நுழைவாயிலும் பதியபெலெல்ல ஊடாக அமைந்துள்ளது. அதனால் வர்த்தக சமூகத்தினர் வீதியைப் பயன்படுத்துவோர் அங்கு வசிப்போர் மற்றும் பதியபெலெல்ல நகரிற்கு வருவோர் ஆகிய அனைவரினதும் நலன் கருதி இம்மண்சரிவு ஆபத்துத் தன்மையினைக் குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
|
|
|
மண்சரிவு பற்றிய ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவினால் 2009 சனவரி மாதத்தில் புவி அறிகுறி புவியியல் மற்றும் நீர் விஞ்ஞான ஆய்வுகள் என்பன நடத்தப்பட்டதுடன் அதன் பின்னர் ஆபத்து நிலையை குறைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. புவி தொழில் நுட்ப பொறியியலாளர் பிரிவினால் புவி அறிகுறிகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், மனித குடியேற்றங்கள் மற்றும் சமூக விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டது. இப்பல்துறைசார் தொழில் நுட்ப ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு நிறுத்தல் வியூகங்களை அமைத்தல், மண்ணின் மேற்புறமாக நீர் வடிந்தோடக் கூடியவாறு வழியமைத்தல் போன்ற செயற்பாடுகளைக் கடைப்பிடித்தல் என்பன பயன்படுத்தக் கூடிய மிகவும் பொருத்தமான வழிமுறைகளாக இதன்போது இனங் காணப்பட்டன. நிறுத்தல் வியூகங்களை அமைக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
ஆபத்தினை குறைக்கும் செயற்பாடானது 2011 சனவரி மாதமளவில் பூர்த்தியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இச்செயற்திட்டத்திற்கான மொத்த செலவினம் 71 மில்லியன் ரூபாவாகும்.
மஹவௌ மண்சரிவு அபாயத்தின் தன்மையினைக் குறைத்தல்
நுவரெலியா மாவட்டத்தின் கும்பல்கம, மஹவௌ எனுமிடத்தில் மண்சரிசொன்று இடம்பெற்றது. 2007 சனவரி 12 ஆம் திகதி பெரும் மழையுடன் ஏற்பட்ட இம்மண்சரிவு காரணமாக 65 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதத்திற்குள்ளாகின. ஆதன் காரணமாக அனைத்து கிராம வாசிகளையும் அப்போதைய வசிப்பிடங்களிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலாவது மண்சரிவுடன் தொடர்ந்தும் பெய்த கடும் மறை காரணமாக மண்சரிவுப் பிரதேசமானது படிப்படியாக வலபனை - ஹங்குரன்கெத்த பிரதான வீதி வரையில் பரவியது. இம்மண்சரிவு நிலையானது தொடரும் பட்சத்தில் பள்ளத்தாக்கின் மிகவும் கீழாக அமைந்துள்ள கீர்த்தி பண்டார வித்தியாலயம் முழுமையாக அழிவுக்குள்ளாகும் அபாயம் காணப்பட்டது. அதனால் மண்சரிவு பற்றிய ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவானது இலங்கை அரசாங்கத்தினதும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பிற்கான முகவராண்மை என்பவற்றின் உதவியுடன், மண்சரிவின் மூலம் ஏற்படக் கூடிய சேதங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.
மண்சரிவு பற்றிய ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவினால் 2009 ஆம் ஆண்டிலே புவி அறிகுறிகள், புவியியல் மற்றும் புவி நீர் பற்றிய விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அதன் பின்னர் ஆபத்தினைக் குறைப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. மஹவௌ மண்சரிவு அபாயத்தைக் குறைப்பதற்கான பணிகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும். ஆவையாவன (அ) புவி மீது அசைவு அதிர்வு கருவிகள் பொருத்துதல்.
(ஆ) பின்னூட்டல் மற்றும்
(இ) இலகுபடுத்தல் என்பனவாகும். முதல் கட்டத்தின் கீழ் வருடாந்த மழை வீழ்ச்சி அளவீட்டுக் கருவி, புவி விரிவு அளவீட்டுக் கருவி என்பன பொருத்தப்பட்ட புவியில் ஏற்படுகின்ற அசைவுகள் பற்றித் தற்போது பின்னூட்டல் செய்யும் பணி இடம்பெற்று வருகின்றது.


பதுளை மாவட்டத்தின் மண்சரிவு அபாயங்களைக் குறைத்தல்
மனித செயற்பாடுகளின் அதிகரிப்பு மற்றும் மலைநாட்டுப் பிரதேசங்களில் திட்டமிடாத அபிவிருத்திப் பணிகள் என்பவற்றின் விளைவாக பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகள் இடம்பெறும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு இனங்கண்டுள்ளது. அதனால் இவ்வமைப்பானது பதுளை மாவட்டத்திற்காகப் பிரத்தியேக காணிப் பாவனை முறைமைகளை அறிமுகம் செய்ததன் மூலம் கட்டமைப்பு ரீதியற்ற அபாயத்தைக் குறைப்பதற்கான செயற்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இச்செயற்திட்டமானது, இலங்கையின் காணிப் பாவனைக் கொள்கை வகுப்புத் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்த உள்ளது. மாவட்டத்தில் இற்றைப்படுத்தப்பட்ட காணிப் பாவனை வரைபடங்கள் மேற்படி திணைக்களத்தினால் வழங்கப்படுவதுடன், மண்சரிவு அபாயம் தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைச்சினால் மதிப்பீடு செய்யப்படும். இம்முயற்சியின் அடிப்படைப் பெறுபேறாகக் கட்டிடங்கள் மற்றும் ஏனைய நிர்மாணங்கள் எற்பவற்றிற்குப் பொருத்தமான காணிப் பாவனை பற்றிய தொழில் நுட்பம் மற்றும் வழிகாட்டல்கள் அடங்கிய தொகுதியொன்று வெளியிடப்படும். அத்தொழில் நுட்பத்தின் மூலமும் வழிகாட்டல்கள் மூலமும் திணைக்களமானது மேற்படி நடவடிக்கை எடுக்கும். இந்த அபாயத்தைக் குறைப்பதற்கான செயற்திட்டத்தின் மொத்தச் செலவினம் 03 மில்லியன் ரூபாவாகும்.

மாத்தளை மாவட்டத்தில் அவதானிக்கப்பட்டுள்ள நிலம் வெடித்து மூழ்கும் அபாயத்தைக் குறைத்தல்
மாத்தளை நகரை அண்டி யபரந்த நிலப்பரப்பில் 2006 ஆம் ஆண்டிலே, பல வீடுகளில் வெடிப்பு ஏற்படல், திடீரென நிலம் வெடித்து மூழ்கியமை மற்றும் பல்வேறு நீர் பெருக்குகள் நிலத்தில் தோன்றியமை போன்ற புதுமையான நிகழ்வுகள் இடம்பெறத் தொடங்கின. உக்குவளையிலிருந்து மாத்தளை ஊடாக பலாபத்வெல வரையிலான விசேட வலயமொன்றில் வீடுகளில் இடையிடையே வெடிப்புக்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையானது மிகவும் பயங்கரமான பாரதூரமான ஒன்றாகத் தீர்மானிக்கப்பட்டது. செயற்திட்டத்தை ஆரம்பித்ததன் பின்னர் மாத்தளை மற்றும கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ள சுமார் 3000 வீடுகள் இனங்காணப்பட்டன. வெடித்து மூழ்கும் அபாயத்திற்கு உட்பட்ட வலயங்களை உள்ளடக்கிய பூரண விளக்கமொன்றுடன் கூடிய வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பானது கட்டமைப்பு ரீதியற்ற அபாயங்களைக் குறைப்பதற்கான செயற்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது. அச்செயற்திட்டத்தின் நோக்கமாக அமைவது கட்டிட நிர்மாணம் மற்றும் நிலத்தின் மீது நீர் வடிந்தோடுவதற்கான வழிகாட்டல்களை தயாரிப்பதாகும். மேலும் உத்தேச வழிகாட்டல்களைக் கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு வழிகாட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்செயற்திட்டத்தின் மொத்த செலவினம் 2.0 மில்லியன் ரூபாவாகும்.


விழிப்பூட்டல் மற்றும் பயிற்றுவித்தல் நிகழ்ச்சித் திட்டங்கள்
மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயத்திற்கு உட்பட்டு வாழ வேண்டியமை தொடர்பான அறிவினை அதிகரிப்பதற்காக மலைப் பள்ளத்தாக்குகளில் வாழுகின்ற மக்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. இந்நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் நோக்காகக் கொள்ளப்பட்டுள்ள குழுக்களாக அமைவது பாடசாலை பிள்ளைகள், தீர்மானம் எடுப்போர், திட்டமிடலாளர்கள், நிருவாகிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் ஆகியோராவர். மேலும் உத்தேச வழகாட்டல்களைக் கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றிப் பொது மக்களுக்கு வழிப்பூட்டுவதற்கான புத்தகங்கள், சுவரொட்டிகள், வீடியோ, மற்றும் கைந் நூல்கள் என்பன தேசிய தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
- மண்சரிவு ஏற்படக் கூடிய பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் விழிப்பூட்டல்/பயிற்சியளித்தல் நிகழ்ச்சித் திட்டங்களைக் கோருதல்.
- இலங்கையில் மண்சரிவு
- மண்சரிவு பற்றிய முன்னெச்சரிக்கை விடல்
- மண்சரிவு அபாயங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்
- கடும்மழை பெய்யும் போது என்ன செய்தல் வேண்டும்?
- மண்சரிவு பற்றி முன்னெச்சரிக்கை கிடைக்கப் பெற்றால் நான் என்ன செய்தல் வேண்டும்?
- மண்சரிவொன்று இடம்பெறும் போது என்ன செய்தல் வேண்டும்?
மண்சரிவு பற்றி முன்னெச்சரிக்கை விடல்
அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மண்சரிவு ஏற்படுவதற்கான இடமுள்ள பிரதேசங்களை விட்டு விலகுவதற்கு முன்கூட்டியே விடுக்கப்படும் முன்னெச்சரிக்கையாக மண்சரிவு அபாயம் காணப்படும் வலயங்களை உள்ளடக்கிய வரைபடத்தினை பயன்படுத்தக் கூடியதாக உள்ளபோதிலும், உயர் மட்டத்திலான மண்சரிவு அபாயம் காணப்படுகின்ற அதிகமான பிரதேசங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். அதனால் இம்மக்களை உயிர் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பதற்கு மழைவீழ்ச்சித் தரவுகள் மற்றும் மண்சரிவு புலனுணர்வு என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவினால் மண்சரிவு பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கின்றது.
அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும்போது மண்சரிவு ஏற்படுவதற்கு இடமுள்ள பிரதேசங்களை தவிர்த்துக் கொள்வதற்கு முன்கூட்டியே கிடைக்கப்பெறும் எச்சரிக்கைக் கருவியாக மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயத்திற்குட்பட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய வரை படத்தினை பயன்படுத்தக் கூடியதாக உள்ள போதிலும், உயர் மட்டத்திலான மண்சரிவு அபாயம் காணப்படுகின்ற அதிகமான இடங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களின் உயிர் பாதுகாப்பிற்காக மழைவீழ்ச்சித் தரவுகள், மண்சரிவு புலனுணர்வு என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு மண்சரிவு ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவினால் மண்சரிவு பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து வருகின்றது.
மண்சரிவு தரவு முறைமை
உள்ளடக்கம் இல்லை.







காணிகளில் மண்சரிவு ஏற்படல் தொடர்பான ஆய்வு சேவைகள்







