2011 ஆவணி 01 இல், DMC மற்றும் JICA உடன் NBROவும் சேர்ந்து, மண்சரிவு முன்னெச்சரிக்கைச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள சகல நிறுவனங்கள் மத்தியில் தயார்ப்படுத்தலை வலுப்படுத்துவதற்காக செயலுருப் பயிற்சியொன்று நடைபெற்றது. திட்டமிடப்பட்ட செயற்பாட்டின் ஓர் பகுதியாக, NBROவின் மண்சரிவு ஆய்வுகளும், சேவைகளுக்குமான பிரிவு, 2011 ஆவணி 01 அன்று 14.00 மணிக்கு முதலாவது மண்சரிவு எச்சரிக்கையை DMCற்கு வழங்கி இரத்தினபுரி,; கேகாலை, ஹாலிஎல, மற்றும் வலப்பனை நிர்வாகப் பிரிவுகளிலுள்ள ஹெலஉட, போகலஹொடேகம மற்றும் அலகொலவௌ கிராம அதிகாரி பிரிவுகளில் மண்சரிவுகள் தூண்டப்படுவதின் சாத்தியங்களுக்கு உசார்ப்படுத்தியது. NBROவின் உசார்ப்படுத்தலைப் பெற்றதும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களை DMC உசார்படுத்தியது. அவர்கள் உரிய கிராமஅதிகாரிகளுக்கு எச்சரிக்கையைப் பரப்பினார்கள். 14.44 மணியளவில் இரண்டாவது எச்சரிக்கையை DMCயிற்கு NBRO வழங்கி வெளியேற்றுகைக்கான தயார்ப்படுத்தலின் அவசியத்தை அறிவித்தது. அவ் எச்சரிக்கையும் அதே செயல்முறைகளைப் பின்பற்றி கிராமஅதிகாரி மட்டங்களுக்கு பரப்பப்பட்டது. கொழும்பு பிரதான அலுவலகத்திலிருந்து மண்சரிவு எச்சரிக்கைகளை வழங்குவதற்கும் மேலதிகமாக பிரதேச மட்டங்களிலும் கூட இந்த செயலுருப் பயிற்சியில் NBRO விஞ்ஞானிகள் பங்குபற்றினார்கள்.






