Plaxis மென்பொருள் தொடர்பான பயிற்சி

 

 

 

Plaxis மென்பொருள் தொடர்பான பயிற்சி கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29-31ஆம் திகதிகளில்தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சி Plaxis நிறுவனத்தின் பிராந்திய தொழில்நுட்ப முகாமையாளர் கலாநிதி. வில்லியம் ஷெயாங்க் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது. கலாநிதி வில்லியம் புவித்தொழில்நுட்ப துறையின் கணிப்பீடுகள் தொடர்பில் நிபுணத்துவமிக்கவர் ஆவார். காலநிலை தாங்குதிறன் மேம்பாட்டு செயற்த்திட்டத்தின் கீழ் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கென கொள்வனவு செய்யப்பட்ட மென்பொருள் தொடர்பிலேயே இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

PLAXIS புவித்தொழில்நுட்பம் சார் பிரச்சனைகளுக்கு பரந்தளவில் பயன்படுத்தப்படும் மென்பொருளாகும். சிக்கலான நிலத்தன்மைகளை கொண்ட இடங்களுக்கான புவித்தொழில்நுட்ப மாதிரிகளை உருவாக்க பயன்படும் வினைத்திறனான மென்பொருள் PLAXIS ஆகும். அகழ்வு, தடுப்பு அணை, சுரங்க பாதைகள் மற்றும் நீர்த்தேக்க புவி இயந்திரவியல் நடவடிக்கைகள் தொடர்பான பகுப்பாய்வு மற்றும் மாதிரிகள் இம்மென்பொருள் மூலம் தயாரிக்க முடியும். இப்பகுப்பாய்வின் மூலம் உருமாற்றம் மற்றும் பாரம் தொடர்பாக ஏற்படும் மாற்றங்களை தொடர்ச்சியாக அறிந்துகொள்ள முடியும். அத்துடன் சாய்வுகளில் மழைவீழ்ச்சி போன்ற இயற்கை காரணிகள் அல்லது அகழ்வு போன்ற மனித நடவடிக்கைகள் காரணமாக ஏற்படக்கூடிய உருமாற்றங்களையும் மதிப்பீட்டுக்கொள்ள முடியும்.

முப்பரிமாண அல்லது இருபரிமாண மாதிரிகள் தொடர்பில் வழங்கப்பட்ட இந்த முழுமையான பயிற்சியின் கீழ் மென்பொருள் தொடர்பான அடிப்படை கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகள் ஆகியன உள்ளடக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் புவித்தொழில்நுட்ப பொறியியலாளார்கள் குறித்த மென்பொருளை எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய புவித்தொழில்நுட்பம் சார் பிரச்சனைகளை தீர்க்க மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

                      

1      2